சோனியாவின் கணக்கு பொய்த்துப் போகும்- பாஜக எம்.பி

மத்தியில் ஆட்சி புரிந்து கொண்டிருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் நடக்க உள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இப்போது தான் ஏற்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி, ‘எங்களிடம் போதுமான வாக்குகள் இல்லையென்று யார் சொன்னார்?’ என்று ஆளும் கட்சிக்கு சவால் விடும் தொனியில் கேட்டுள்ளார். இதையடுத்து பாஜக தலைவர் ஆனந்த் குமார், ‘சோனியா காந்தியின் கணக்கு வீக் ஆக இருக்கிறது. இப்படித்தான் அவர் 1996 ஆம் ஆண்டும் கணக்கு போட்டார். அப்போது என்ன நடந்தது என்பது தெரியும். தற்போதும் அதே தப்பைத்தான் செய்கிறார். மோடி அரசுக்கு கூட்டணிக்கு உள்ளேயும் வெளியேயும் பலம் அதிகமாக இருக்கிறது" என்றார்.

More News >>