மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் நடிக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு

மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் நடிக்கும் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போத் வெளியாகி உள்ளது.

மிஷ்கின், சுசீந்திரன், விக்ராந்த் என புதிய கூட்டணியில் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படம் தயாராகி வருகிறது. நடிகர்கள் கூட்டணியே சற்று வித்தியசமாக அமைக்கப்பட்டுள்ளது. இயக்கம், நடிப்பு என கலக்கி வரும் மிஷ்கின், போஸ்டர் லுக்கில் அதிரடி மிரட்டல் உடன் உள்ளார்.

இதுவரை இயக்குநராக இருந்து வந்த இயக்குநர் சுசீந்திரன் தற்போது நடிகர் அவதாரத்தை முதன்முதலாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்த வித்தியசமான கூட்டணியில் வித்தியசமான கதைக் களங்களில் மட்டும் நடித்து வரும் விக்ராந்த் இணைந்துள்ளார்.

ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் கல்பதரு பிக்சர்ஸ் பி.கே.ராம் மோகன் தயாரிப்பில் தயாரிக்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>