விரைவில் தோனி 2.. முன் தயாரிப்பு பணிகள் தீவிரம்
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தோனி என்ற பெயரில் உருவாகிய நிலையில், தற்போது, தோனி 2 உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்றி பெயரில் எடுக்கப்பட்டது. இந்தியில் உருவான இந்தப் படம் தமிழ் டப்பிங்கிலும் வெளிவந்தது. இந்த படத்தில் தோனியாக சுஷாந்த் சிங்கும், சாக்ஷியாக கியாரா அத்வானியும் நடித்தனர். இந்த படத்தில் தோனியின் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் காட்டப்பட்டது.
தோனியின் முதல் பாகம் வெற்றியடைந்த நிலையில், அதன் இரண்டாம் பாகம் படம் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது, தோனி 2வின் முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகத்தில், இந்திய அணி உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு நடைபெற்ற சம்பவங்கள் குறித்து படம் எடுக்கப்படும் என்று தெரிகிறது.