இந்தியில் அரசியல்வாதியாக களமிறங்கும் தனுஷ்..
நடிகர் தனுஷ் இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து அடுத்த படத்தில் முழு அரசியல்வாதியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தமிழில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தமிழ் தவிர நடிகர் தனுஷ் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில், ராஞ்சனா பட இயக்குனர் ஆனந்த் ராய் அடுத்ததாக இயக்க இருக்கும் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இந்த படம் ராஞ்சனா 2 உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ராஞ்சனா படத்தின் முதல் பாகத்தில் உயிர்த்து எழுவேன் என சொல்லி இறந்து போகும் நிலையில், இரண்டாம் பாகத்தில் உயிர்தெழுவது போல் கதை நகறும் என்றும், இதில் தனுஷ் முழு அரசியல்வாதியாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.