குழந்தை பிறந்ததும் கோமாவில் இருந்து உயிர்தெழுத்த பெண்..
கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், தற்போது அவர் உயிர்தெழுந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள வழூவூரை சேர்ந்தவர் அனூப். இவருக்கு பெத்தனா என்ற மனைவி உள்ளார். பெத்தனா கடந்த ஜனவரி மாதம் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். அப்போது அவர் கீழே விழுந்து தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் கோமா நிலைக்கு சென்றார்.
கர்ப்பிணியாக இருக்கும் நேரத்தில் பெத்தனா கோமாவிற்கு சென்றுவிட்டாரே என்று அவரது குடும்பத்தினர் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்தனர். இருப்பினும், பெத்தனாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையிலேயே, அனூப் உடனிருந்து கவனித்து வந்தார்.
இந்நிலையில், பெத்தனாவிற்கு கடந்த 14ம் தேதி தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதற்கு பிறகு, பெத்தனாவின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
குழந்தை ஒவ்வொரு முறையும் அழும்போதும், பால் குடிக்கும்போது பெத்தனாவின் முகத்தில் மாற்றம் ஏற்படுவதைக் கண்டு அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.இதனால், பெத்தனா விரைவில் முழுமையாக குணமடைந்துவிடுவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று அனூப் தெரிவித்துள்ளார்.