மாநில அந்தஸ்து... புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி புதுச்சேரியை 15வது நிதிக்கமிஷன் வரம்பில் கீழ் கொண்டு வந்து அரசின் திட்டங்களை முனைந்து செயல்படுத்திடவும் புதுச்சேரி ஆட்சிப்பரப்பு முழு வளர்ச்சி பெற்றிடவும் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனடியாக தாமதமின்றி வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் நாராயணசாமி தீர்மானம் கொண்டுவந்தார்.
அனைத்து கட்சி உறுப்பினர்களால் ஏகனமதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே போல் நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும், உயர்கல்வி நிறுவனங்களையும் கண்காணித்து வரும் பல்கலைக்கழக மானியக்குழுவை மாற்றி புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ளதால் மா னியங்கள் அளிப்பதில் பாகுபாடு காட்ட வாய்ப்புள்ளது.
மேலும் இது மாநில அரசின் உரிமையை பறிப்பதாக உள்ளதாகவும் ஆகவே தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக்குழுவே தொடர்ந்து அனைத்து அதிகாரங்களுடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுருத்தும் தீர்மானம் மற்றும் கடந்த 4 ந்தேதி உச்ச நீதிமன்றம் டில்லி மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில் அமைச்சரவைக்கே அதிகாரம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது புதுச்சேரி மாநிலத்திற்கு பொருந்தும் என்றும். அதன் அடிப்படையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனைப்பெற்றே நடத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது.
சிறு சிறு அற்ப காரணங்களை காட்டி கோப்புகளை குடியரசுத்தலைவருக்கு துணை நிலை ஆளுநர் அனுப்பக்கூடாது என்பது தீர்ப்பில் தெளிவாகியுள்ளது. ஆகவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டவர் என்றும் அமைச்சரவையின் முடிவுகளின்படி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த அரசின் தீர்மானம் உள்பட 3 அரசு தீர்மானங்கள் பேரவையில் ஏகமனதாக நிறைவேற்ற்பட்டன.