எழும்பூரில் இருந்து ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கம்

ஆம்னி பேருந்துகள் போன்று ஏ.சி. படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. முன்பதிவு சேவையும் தொடங்கிய நிலையில் கட்டண உயர்வாக இருப்பதால் மக்கள் கொந்தளித்துள்ளனர்.

தமிழகத்தில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதற்கு போட்டியாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சொகுசு பேருந்துகளை அறிமுகம் செய்துள்ளது. ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, போடி, கரூர் உள்பட ஊர்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.

பொதுவாகவே சாதாரண பேருந்துகளை விட சொகுசு பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், கரூர், போடி ஆகிய ஊர்களுக்கு அரசு ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் எழும்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள இடத்தில் இருந்து புறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து, நேற்று முன்தினம முதல் சென்னை டூ நெல்லை பேருந்துகள் இரவு 9 மணிக்கு இயக்கப்படுகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை, போடி, கரூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் அரசு ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகளுக்கான முன்பதிவு சேவையும் தொடங்கப்பட்டு உள்ளது.

பேருந்துகளில் கட்டணம் பொருத்தவிரையில், ஏ.சி. படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் எழும்பூர் - நெல்லைக்கு ரூ.1,245ம், எழும்பூர் - போடிக்கு ரூ.1060ம், எழும்பூர் - கரூருக்கு ரூ.600ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோருக்கு ரூ.30 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆம்னி பேருந்துகளை விட அரசு சொகுசி பேருந்துகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர்.

More News >>