பெட்ரோல், டீசல் விலை திடீர் சரிவு!
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில், ஒவ்வொரு நாளும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
சர்வதேச அளவில் இருக்கும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தும், ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் விலை டெல்லியில் 76.62 ரூபாயும், 79.39 ரூபாயாக கொல்கத்தாவிலும், சென்னையில் 79.59 ரூபாயாகவும், மும்பையில் 84.06 ரூபாயாகவும் உள்ளது.
டீசல் விலையை பொறுத்தவரை டெல்லியில் 68.23 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 71.84 ரூபாயகவும், மும்பையில் 72.44 ரூபாயாகவும், சென்னையில் 72.06 ரூபாயாகவும் உள்ளது. திங்கள் அன்று பெட்ரோல் விலை 11 பைசாவும், டீசல் விலை 14 பைசாவும் சென்னையில் குறைக்கப்பட்டிருந்தது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் மார்க்கத்தில் இருப்பதால், அடுத்த சில வாரங்களுக்கு பெரிய அளவில் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது.