எனக்கு கோபம் வராது: மோடியை கட்டிப்பிடித்து நிரூபித்த ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில், ஜூலை 18ம் தேதி மக்களவை மழைக்கால கூட்டம் துவங்கியது. அதனை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசினையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ராகுல் பேசுகையில், ஜி.எஸ்.டி., பணமதிப்பு இழப்பீடு செய்த பின் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவர் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் தருவதாக பிரதமர் கூறினார், எங்கே பணம்? என கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்கும், நாட்டின் இளைஞர்களுக்கும் பிரதமர் மோடி பொய் வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளார்.

மேலும் ராகுல் அமித் ஷாவின் மகனான ஜெய் ஷாவை குறித்து ராகுல் பேசும் போது மக்களவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சிறிது நேரம் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் கூடியதும் ராகுல், என்னை நீங்கள் பப்பு என்று அழைக்கலாம் அதற்காக நான் கோபப்பட மாட்டேன். என் மீது உங்களுக்கு கோபம் உள்ளதை என்னால் உணர முடிகிறது.

மேலும் அவை இடைவேளையில் ராகுல் பேசியதை பல்வேறு எதிர்கட்சியினரும் பா.ஜ.க.வின் கூட்டணி கட்சி உறுப்பினர்களும் கூட பாராட்டியதாக கூறினார் ராகுல்.

ராகுல் இவ்வளவு கடுமையாக விமர்சனம் செய்த பின்னர் நேராக மோடி இருக்கைக்கு அருகில் சென்று மோடியை கட்டி தழுவினார். இதற்கு மோடியும் பொன் முறுவலுடன் கை குலுக்கி ராகுலை வாழ்த்தினார்.

ராகுல் கட்டிபிடித்ததும் பா.ஜ.க.வின் எம்.பி. பாதல் பேசினார், அப்போது முன்னா பாய் கட்டிப்பிடிவைத்தியம் செய்ய இது சரியான இடம் இல்லை என்றார். மற்றொரு எம்.பி. கிரண் கெர், ராகுல் நடிக்க வாய்ப்பு தேடலாம் என்றார். மேலும் பாராளுமன்ற மந்திரி ஆனந்தகுமார் பேசும் போது ராகுல் வயதளவில் வளர்ந்தாலும், ஒரு குழந்தையை போல தான் இருக்கிறது அவர் செய்கைகள் என்றார்.

More News >>