உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தஹில்ரமணி?

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில்ரமணி நியமிக்கப்பட பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வந்த இந்திரா பேனர்ஜியின் பெயர் டற்போது கொலிஜியம் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவருக்கு அடுத்தாற் போல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவிக்கு தஹில்ரமணியின் பெயர் கொலிஜியம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>