மாற்றான் தாயாக நடக்கும் மத்திய அரசு- லோக்சபாவில் அதிமுக எம்.பி
’மத்திய அரசு ஒரு மாற்றான் தாய் போல நடந்துகொள்கிறது’ என அதிமுக எம்.பி. வேணுகோபால், நாடாளுமன்ரத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தான விவாதத்தின் போது பேசினார்.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் மத்திய அரசு ஒன்றின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் முதன்முறையாக நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.
இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பாஜக-வுக்கு எந்த வித பாதிப்பும் இருக்காது. அதற்கு தனியாக 273 சீட்கள் இருக்கின்றன. இது பாதியளவை விட மிக அதிகம். ஆனால், பாஜக-வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எதிர்கட்சிகளால் எடுக்கப்பட்டு உள்ளது.
இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் நாடாளுமன்ற அவையில் இதுகுறித்தான விவாதம் நிகழ்ந்தது. இதுகுறித்து நாடாளுமன்ற அதிமுக எம்.பி. வேணுகோபால் பேசுகையில், “தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது” என்றார்.