விஜய் 61 - மெர்ஸல் முதல் தோற்றம்
விஜய் 61 - மெர்ஸல் முதல் தோற்றம்
தளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் இரண்டு லுக்குகள் வெளியாகி விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்ட நிலையில் இந்த படம் குறித்தும், விஜய் குறித்தும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ ஹேமாருக்மணி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது: இந்த படத்திம் உற்சாகமே இந்த படத்தின் சஸ்பென்ஸ் எதுவும் வெளியாகாமல் யாருக்குமே தெரியாமல் இருப்பதுதான். விஜய் இந்த படத்தில் நடிக்கும் அனைத்துமே வித்தியாசமானது. இந்த ரோல்கள் குறித்து நீங்கள் பலவகையாக யூகித்து கொண்டே இருக்கலாம். விஜய்யின் திரையுலக கிராஃபில் இந்த படம் அவருக்கு ஒரு வைரமகுடமாக இருக்கும். தேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படத்தில் விஜய் நடிப்பது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை' என்று கூறியுள்ளார்.