அமெரிக்காவில் இந்திய சுதந்திர தினம்: கமல், ஸ்ருதிஹாசன் பங்கேற்பு
இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் நிறைவடைந்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி 72வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை ஆண்டு தோறும் அமெரிக்காவிலும் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த வருடம் இந்தியாவில் இருந்து சென்ற மிகா சிங்க் பாடல்களை பாடி அசத்தி இருந்தார். அந்த வகையில் இந்த வருடம் இந்தியா சார்பில் நடிகர் கமலஹாசனும், அவரின் மகள் ஸ்ருதிஹாசனும் பங்கேற்கிறார்கள்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டு தோறும் நடை பெற்று வரும் இந்திய சுதந்திர தின விழாவின் அணி வகுப்பிலும், அங்கு நடைபெற உள்ள நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க உள்ளார்கள். இவர்கள் மட்டுமில்லாது பலதரப்பு முக்கிய பிரபலங்களும் பங்கேற்கவுள்ளார்கள். கூடுதல் தகவலாக மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்டும் கலந்துகொள்ள உள்ளார்.