தமிழகத்தில் இத்தனை லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பா? அதிர்ச்சியூட்டும் தகவல்

தமிழகத்தில் ஆண்டுதோறும் 5000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எய்ட்ஸ் என்ற உயிர்கொல்லி நோய், மக்களிடையே பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்த பல்வேறு அமைப்புகளும், தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இருப்பினும், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்து 18 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது, ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் பல்வேறு காரணங்களால் எச்ஐவி கிருமியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்ற தகவலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சுமார் 8 ஆயிரம் பேர் வெளியிடங்களில் சிகிச்சை எடுத்து வருவதாகவும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த அதிர்ச்சியூட்டும் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் பார்க்கும்போது குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2016ம் ஆண்டில் 6000 பேர் புதிதாக எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு வழங்கி வரும் முறையான சிகிச்சையால், குறுகியக் கால உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

More News >>