சிவாஜி சணேசனின் 17வது நினைவு தினம்: நடிகர் சங்கம் அஞ்சலி

நடிகர் சிவாஜவி கணேசனின் 17வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அடையாறில் உள்ள அவரது நினைவு மணிமண்டப்பத்தில் நடிகர் சங்கத்தினர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நடிகர் சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அடையாறில் அமைந்திருக்கும் சிவாஜி கணேசனின் நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு பலர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

குறிப்பாக, சிவாஜியின் மகனும், நடிகருமான பிரபு, மகன் ராம்குமார், நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் மனோபாலா ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், சிவாஜியின் ரசிகர்களும் ஆங்காங்கே புகைப்படம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

More News >>