உலகிலேயே தலை சிறந்த நடிகர் விஜய்: ரசிகர்கள் உற்சாகம்

உலகிலேயே தலை சிறந்த நடிகர்களின் பட்டியலில் நடிகர் விஜய் இடம்பிடித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

உலகளவில் உள்ள திரைப்பட நடிகர்கள் மற்றும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் ஐஏஆர்ஏ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், 2018ம் ஆண்டுக்கான ஐஏஆர்ஏ விருது வரும் செப்டம்பர் 22ம் தேதி லண்டன் மார்ஷ் வால் பகுதியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற உள்ளது. இதில், தலை சிறந்த நடிகர் மற்றும் கலைஞர்களுக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், உலகிலேயே தலை சிறந்த நடிகருகான பட்டியலில், தலை சிறந்த ஹாலிவுட் நடிகர்களான ஸ்டார் வார்ஸ் புகழ் ஜான் போயிகா, கெட் அவுட் திரைப்பட நடிகர் டேனியல் கலூயா, ஜாமி லோமஸ் (ஹொலியோக்ஸ்) க்ரிஸ் அட்டோ (ஸ்விங்ஸ்), ஏஜெண்ட் திரைப்பட நடிகர் கும்புலாமி கே சிபியா, சில்டரன்ஸ் ஆப் லெஸ்ஸர் காட் நடிகர் ஜோஷ¨வா ஜாக்சன், சைட் சிங் கேங் நடிகர் அட்ஜெட்டே அனாங், எல் ஹெபா எல் அவ்டா நடிகர் ஹசன் மற்றும் தி ராயல் ஹைபிஸ்கஸ் ஹோட்டல் பட நடிகர் கென்னத் ஒக்கோலி ஆகியோருடன் இளையத்தளபதி விஜய்யின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

உலகின் சிறந்த நடிகர்களுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பிரந்துரைக்கப்பட்ட ஒரே நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியலில் விஜய் ஜோசப் (மெர்சல்) என்று இடம்பெற்றுள்ளது. இதனால், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

More News >>