பிரபாஸ் மாப்பிள்ளையாக வந்தால்...நடிகை அனுஷ்கா அம்மா மனம் திறப்பு
நடிகை அனுஷ்காவின் அம்மா முதன்முறையாக நடிகர் பிரபாஸ்- அனுஷ்கா உறவு குறித்து மனம் திறந்துள்ளார்.
தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான ஜோடியாகக் கருதப்படுபவர்கள் அனுஷ்கா- பிரபாஸ். இவர்களின் ஆன் ஸ்கிரீன் கெமிஸ்டிரியால் ரசிகர்களைக் கட்டி வைத்துவிடுவார்கள். குறிப்பாக பாகுபலி திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் கரை புரண்டு ஓடுவதாகவே ரசிகர்கள் நம்பி வருகிறார்கள்.
ஆனால், எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என நடிகை அனுஷ்கா மற்றும் நடிகர் பிரபாஸ் ஆகிய இருவரும் விளக்கம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தன் மகளின் திருமணம் குறித்து நடிகை அனுஷ்காவின் அம்மா கூறுகையில், "எனக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை வரவேண்டும் தான் ஆசை. அவர் மாப்பிள்ளையாக வந்தால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆனால், இருவரும் தங்களுக்குள் நட்பு மட்டும் தான் உள்ளது எனக் கூறுகின்றனர்.
இதனால் தான் தற்போது அனுஷ்காவுக்கு நல்ல மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறோம். வீண் வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள்" எனக் கூறியுள்ளார்.