சேலத்தில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவு

சேலத்தில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சேலத்தில் இன்று காலை பூமி அசைவது போல் மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் பலரும் அவரவர் வீடுகளை விட்டு வெளியேறி நிலநடுக்கம் என அச்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி ஆகியப் பகுதிகளில் நிலநடுக்கம் அதிகப்படியாகவே உணரப்பட்டுள்ளது.

இந்த மிதமான நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 3.3 ஆகப் பதிவாகி உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயருவதால் தான் இவ்வாறு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணையின் மொத்த கொள்ளவு 120 அடி ஆகும்.

ஆனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 117 அடியாக உயர்ந்துவிடுகிறது. இதனால் தற்போது மேட்டூர் அணையிலிருந்து 20 ஆயிரம் கண அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக கர்நாடகா அணைகளிலிருந்து மணிக்கு 60 கண அடி நீர் நிரம்பி வருகிறது.

More News >>