சிகாகோவில் கிறிஸ்மஸ் விழா...!

கிறிஸ்மஸ் வந்துவிட்டது...

இன்னும் ஒரு வாரம் இருக்கிறதே, அதற்குள் கிறிஸ்மஸ் வந்துவிட்டதென்று சொல்கிறேன் என யோசிக்கிறீர்களா?

ஆம், நம் நாட்டிலுள்ள கிறிஸ்தவ மக்களுக்கு மட்டும்தான் டிசம்பர் 24-25 கிறிஸ்மஸ் பண்டிகை, ஆனால் மேற்கத்திய நாடுகளில் டிசம்பர் மாதம் பிறந்தவுடன் இயேசு பாலனின் பிறப்பை கொண்டாட தொடங்கி விடுவார்கள். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் பல தமிழர்களும், இந்தியாவிலுள்ள மக்களைப்போல, கிறிஸ்மஸ் தினத்தில் மட்டும் கிறிஸ்மஸ் விருந்து முடித்துவிட்டு, அலுவல்களை பார்க்க கிளம்பி விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் விதி விலக்காக, அமெரிக்காவில் ஒரு தமிழ் சபை, டிசம்பர் முழுவதும் கிறிஸ்மஸை விமரிசையாக கொண்டாடி வருகிறது.

வட அமெரிக்காவில் இலினாய்ஸ் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரம் சிகாகோ. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள், தமிழ் கிறிஸ்தவர்களும் அதிகம் பேர் வசிக்கின்றனர். அவர்கள் சிகாகோ மாநகரில் உள்ள addison என்னுமிடத்தில் Christ Tamil Church என்ற பெயரில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ் மொழியில் ஆராதனைகள் நடத்தி வருகிறார்கள், சின்ன சபை தானே தவிர, இங்கு வருபவர்கள் பெரிய உள்ளங்களை கொண்டவர்கள் அந்த சபையைச் சேர்ந்த தமிழ் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் இணைந்து கிறிஸ்மஸ் விழாக்களை வருடந்தோறும் சிறப்பான முறையில் நடத்தி, கிறிஸ்மஸை கொண்டாடி வருகிறார்கள்.

கடந்த வாரம் முதல், கிறிஸ்மஸ் சங்கீத பவனி என்ற பெயரில், கிறிஸ்மஸ் தாத்தா வேடமணிந்து, அங்குள்ள தமிழ் மக்களின் இல்லங்களுக்குச் சென்று, கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்லியும், அன்பளிப்புகள் அளித்தும், இனிப்புகள் வழங்கியும் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள். மேலும், அவர்களது Christ Tamil Church சார்பாக, அங்குள்ள சபை தமிழ் மக்கள் பலரை, மத பாகுபாடு இன்றி கலந்து கொள்ள வைத்து, இயேசு எல்லா மதத்தினருக்கும் இரட்சகர் என்பதை உணர்த்தும் விதமாக, சமத்துவ கிறிஸ்மஸ் விழாவாக நடத்தினர்.

சபையின் விவரங்களை அறிந்துகொள்ள.... இங்கே க்ளிக் செய்யவும்

சபையின் போதகர். திரு. காட்வின் கனகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார், சபை உறுப்பினர்கள் முன்னிலையில் சிறுவர், சிறுமிகளின் கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, கலந்துகொண்ட அனைவரையும் மகிழ்வித்ததோடு மட்டுமல்லாமல், இறை செய்தியையும் பகிர்ந்தனர், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தமிழில் பாடல்கள் பாடி, இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் காட்சியை நாடகமாக நடித்து, நடனமாடி விழாவை சிறப்பித்தனர். குழந்தைகள் உற்சாகமாக கைகளை அசைத்து நடனமாடிய காட்சி பார்க்கவே அருமையாக இருந்தது.

அன்பே பிரதானம் என்ற தலைப்பில் வாலிபர்கள் நடித்துக்காட்டிய குறுநாடகம், அன்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், அனைவர் மனதிலும் ஆழமாக பதியும்படியாகவும் இருந்தது, விழா முடிவில் கிறிஸ்மஸ் தாத்தா வருகை தந்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்வித்தார். சபை போதகர் வந்திருந்த அனைவரையும் வாழ்த்தி ஆசி வழங்கினார். சபை மக்கள் மட்டுமில்லாது, பிற நன்பர்களின் குடும்பங்களும், எந்தவித மத பாகுபாடும் இல்லாமல் கலந்து கொண்டனர். இது இந்தியர்களின் மதசார்பின்மையை வெளிப்படித்தியதோடு அன்பின் தெயவமான இயேசுவின் மகிமையை பறைசாற்றுவதாக அமைந்தது.

முடிவில் அனைவருக்கும் கிறிஸ்மஸ் இரவு விருந்து வழங்கப்பட்டது. மத பாகுபாடி இன்றி, சுமார் நாற்பது குடும்பங்களுக்கு மேல் இதில் பங்கேற்றனர். கிறிஸ்மஸ் என்றாலே அதை ஒரு சமயம் சார்ந்த பண்டிகையாகவே இந்தியர்களாகிய நாம் பார்த்துப் பழகிவிட்டோம். இயேசு கிறிஸ்து இந்த உலகின் பாவங்களை இரட்சிக்கவே, ஒரு ஏழை கன்னியின் வயிற்றில் பிறந்தாரே தவிர, ஒரு மதம் சார்ந்த மக்களின் நன்மைகளுக்காக அவர் பிறக்கவில்லை, ஆகவே மத பாகுபாடு இல்லாமல் கிறிஸ்மஸ் பண்டிகையை எல்லாரும் சேர்ந்து கொண்டாடலாமே.!

சபையின் விவரங்களை அறிந்துகொள்ள....இங்கே க்ளிக் செய்யவும் 

முகநூல் (Facebook) பக்கத்தைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்...

More News >>