நாட்டின் சிறந்த ஆட்சி உள்ள மாநிலங்கள்- தமிழகத்துக்கு இரண்டாம் இடம்

நாட்டின் சிறந்த ஆட்சி நடைபெறும் மாஅநிலங்களுக்கான பட்டியலில் தென் மாநிலங்களே டாப் இடங்களைக் கைப்பற்றி உள்ளன.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் இருக்கும் பொது நிர்வாகம், ஆட்சி முறை என பல அடிப்படை நிர்வாக அமைப்புகளை ஆராய்ந்து சிறந்த மாநிலங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை பொது விவகாரங்களுக்கான அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் சிறந்த ஆட்சி நடைமுறை, பொது நிர்வாகம் என அனைத்திலும் சிறந்த மாநிலம் ஆக முதல் இடைத்தை கேரள மாநிலம் கைப்பற்றி உள்ளது. இதற்கு அடுத்ததாக இரண்டாம் இடத்த்தில் தமிழகமும், மூன்றாம் இடைத்தில் தெலுங்கானா மாநிலமும் உள்ளது.

அடுத்ததாக நான்காம் இடத்தில் கர்நாடகா மாநிலமும் ஐந்தாவது இடத்தில் குஜ்ராத் மாநிலமும் இடம்பெற்றுள்ளது. இப்படியலில் நாட்டிலேயே கடைசி இடத்தை பிஹார் மாநிலம் பெற்றுள்ளது.

More News >>