120 அடியை எட்டும் மேட்டூர் அணை: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியை நெருங்குவதால் காவிரி கரையோ மக்களுக்கு வெள்ளி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. இதனால், இந்த அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
நேற்று காலை 61,644 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.63அடியில் இருந்து 116.98 அடியாக உயர்ந்தது.
இதற்கிடையே, டெல்டா பாசனத்திற்காக 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 118 அடியை எட்டியது. நீர்மட்டம் 120 அடியை எட்டும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்ட காலெக்டர் ரோகிணி கூறுகையில், “மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாறை (இன்று) 120 அடியாக உயயரும். உபரிநீர் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இதுகுறித்து, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், ஈரோடு உள்பட 12 மாவட்ட கலெக்டர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையை பொது மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். எச்சரிக்கையை மீறி குளித்ததால் தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.