ஆசிய மல்யுத்தம்- பதக்க வேட்டையில் இந்திய வீரர்கள்
ஆசிய ஜூனியர் மல்யுத்தப் போட்டிகளில் 173 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றி உள்ளது.
2018 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஜூனியர் மல்யுத்தப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா 2 தங்கங்கள் வென்றது. 86 கிலோ எடைப் பரிவில் போட்டியிட்ட தீபக் புனியா, தங்கம் வென்றார்.
அதைப் போலவே, 74 கிலோ எடைப் பிரவில் சச்சின் ராதி தங்கம் வென்று அசத்தினார். மேலும் 61 கிலோ எடைப் பிரிவில் சூரஜ் கோகடே மற்றும் 125 கிலோ எடைப் பிரவில் மோகித்தும் வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ளனர்.
இந்த ஆண்டு, ஈரான் நாடு சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. மொத்தம் 11 தங்கம் வென்ற ஈரான், 189 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது. இந்தியா, 173 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், 128 புள்ளிகளுடன் உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.