அடடே.. மொறுமொறுப்பான மீன் மிளகு வறுவல் ரெசிபி
அசைவ பிரியர்களே.. இதோ உங்களுக்கான சுவையான மீன் மிளகு வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோமிளகு - 2 தேக்கரண்டிசீரகம் - 2 தேக்கரண்டிசோம்பு - 1 தேக்கரண்டிஇஞ்சி - 1 இன்ச் நீளம்பூண்டு - 8 பல்எலுமிச்சை - 1உப்பு - தேவையான அளவுஎண்ணெய் பொரிக்க - 70 மில்லிசோள மாவு - 1 தேக்கரண்டி
செய்முறை
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி, மெலிதாக நறுக்கி வைக்கவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து நைசாக அரைக்கவும். இஞ்சி, பூண்டையும் நன்கு அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கழுவிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு + இஞ்சி பூண்டு விழுது + எலுமிச்சை சாறு +உப்பு+ சோளமாவு போட்டு பிசையவும்.
சோளமாவு மசாலா உதிராமல் மீனுடன் ஒட்டி இருக்க உதவும். அதனை அப்படியே ஒரு மணி நேரம் குளிர்பதனப் பெட்டியில் வைக்கவும். பின்னர், அடுப்பில்ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாய் போடவும். தீயை சீராக எரிய விடவும்.
மீன் துண்டுகளை ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும் இல்லையென்றால் மீன் கருகி விடும்.
பின்மீனில் ஒட்டியுள்ள மசாலா சிவந்து ஒரு பக்கம் வெந்ததும், அவற்றை மிக மெதுவாக உடையாமல் அப்படியே புரட்டிப் போடவும். இரு பக்கமும் நன்கு வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும். சுவையான மீன் மிளகு வறுவல் ரெடி.