சார்லி சாப்ளின்-2 படத்திற்காக பாடும் செந்தில் கணேஷ்nbsp

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ், அவரது மனைவி ராஜலட்சுமி முதல் முறையாக சார்லி சாப்ளின்- 2 படத்திற்காக சினிமா பாடகராக களமிறங்கியுள்ளனர்.  பார்ட்டி படத்தை தயாரித்த சிவாவின் அம்மா கிரியேசன்ஸ் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் ‘சார்லி சாப்ளின்-2 படத்தை தயாரித்து வருகிறது.   இதில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா‌ஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். இந்தி, தெலுங்கு நடிகையான அதா‌ஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது.    முழுக்க முழுக்க கமர்ஷியல்,காமெடி படமாக சார்லி சாப்ளின் 2 உருவாகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. முக்கிய விஷயம் என்னன்ன, சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னரும், நாட்டுப்புற பாடல்கள் மக்கள் மனம் கவர்ந்த செந்தில் கணேசும், அவரது மனைவி ராஜலட்சுமியில் இந்த படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.    முதல் முறையாக சினிமாவில் கால் பாதிக்கு, இந்த ஜோடியின் இசை பயணம் சிறக்க, பலரும் பாராட்டி வருகின்றனர்.
More News >>