ட்விட்டரில் கால் பதித்துள்ளார் செல்லூர் ராஜு!
தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு புதிதாக ட்விட்டரில் இணைந்துள்ளார்.
தமிழக அரசியலுக்கும் இந்திய அரசியலுக்குமே சவால்விடும் நிலையில் தான் உள்ளது ட்விட்டர் அரசியல். அந்த அளவுக்கு ட்விட்டரில் அரசியல் பேசி, அரசியல் நடத்தி இக்காலத்தில் அரசியல்வாதிகளாகவே பலரும் உருவாகும் சிறந்த மேடையாக உள்ளது ட்விட்டர்.
தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளனர். மேலும், ட்விட்டரில் ஆக்டிவ் ஆகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் கணக்கே இல்லாமல் ட்விட்டர் வாசிகளால் அளவுக்கு அதிகமாகவே ட்ரோல் செய்யப்படுவோரில் டாப் இடத்தில் உள்ளவர் தான் தமிழகக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு.
தற்போது அமைச்சர் செல்லூர் ராஜுவும் ட்விட்டரில் இணைந்து போஸ்ட் மேல் போஸ்ட் செய்து வருகிறார். செல்லூர் ராஜுவுக்கு ட்விட்டர் ஆதரவு அளிக்கும் வகையில் முதல்வர் ஈ.பி.எஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் ராஜுவின் பதிவுகளுக்கு லைக் செய்துள்ளனர்.