அரை நாளில் 1 மில்லியன் பார்வையாளர்கள்: பியார் பிரேமா காதல் சாதனை
பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் ரிலீசாகி அரை நாளில் சாதனை படைத்துள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பயங்கரமாக ரீச் ஆனவர்களில் ரைசாவும், ஹரிஷ் கல்யாணும் ஆவார்கள். இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்த பிறகு, ஜோடியாக நடிக்க ஓப்பந்தம் செய்யப்பட்ட படம் தான் பியார் பிரேமா காதல்.
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு மற்றும் இசையில் மற்றும் இளம் இயக்கத்தில் இப்படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் டோப் என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது இப்படம்.