மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு கோரி மாநிலம் தழுவிய போராட்டம்
மகாராஷ்டிராவில் உள்ள மராத்திய சமூக மக்கள் மராத்தியர்களுக்கான இடஒதுக்கீடு கோரி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டங்கள் நடக்கும் சில இடங்களில் தற்போது வன்முறை வெடித்துள்ளன. அவுரங்காபாத்தில் நடந்த போராட்டத்தில், ஒரு நபர் திடீரென்று ஆற்றுக்குள் குதித்ததால் போராட்டத்தின் வீரியம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த இறப்பு குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், ‘போராட்டத்தில் ஒருவர் இறந்தது மிகவும் துரதிர்ஷ்டமானது. மக்கள் பொறுமை காக்க வேண்டும். இட ஒதுக்கீடு கொடுப்பது குறித்து தீவிரமாக கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறியுள்ளார்.
சில மராத்திய அமைப்புகள் மும்பைக்கு போராட்டத்தை எடுத்துச் செல்லவும் முடிவெடுத்துள்ளன. மராத்தா கிராந்தி மோர்ச்சா அமைப்பு, முதல்வர் எங்களிடம் மன்னிப்பு கேட்டயாக வேண்டும். இல்லையென்றால் பந்தராப்பூர் டவுனில் இருக்கும் கோயிலுக்கு அவர் செல்லும் போது வன்முறையை பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.