குஜராத்தை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக வெற்றி

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியான நிலையில், குஜராத்தை தொடர்ந்து இமாச்சல் பிரதேசத்திலும் பாஜக வெற்றிப் பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 75.28 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்நிலையில், இன்று 42 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பாஜக அடுத்தடுத்து அதிக தொகுதிகளை கைப்பற்றியது. ஆளும் காங்கிரஸ் கட்சி, பின்னடைவை சந்தித்தது. ஆட்சியமைக்க தேவையான 36 இடங்களில் பாஜக சுமார் 40 இடங்களை கைப்பற்றி முன்னிலை பெற்றுள்ளது.

இதன் மூலம், குஜராத்தை தொடர்ந்து, இமாச்சல் பிரதேசத்திலும், காங்கிரசை வீழ்த்தி பாஜக ஆமோக வெற்றியை பெற்று, ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

More News >>