உகாண்டாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை: மோடி திறந்து வைத்தார்
வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா நாட்டில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை திறந்து வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக, பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ளார். அந்த வகையில், நேற்று உகாண்டா நாட்டிற்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன் பிறகு, இருநாடுகளின் உறவுகளை பலப்படுத்துவது குறித்து மோடி மற்றும் யோவேரி முசெவேனி இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, இந்தியா மற்றும் உகாண்டா இடையே 4 புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடப்பட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தங்களிளும் கையெழுத்திடப்பட்டன.
இதன் பிறகு, உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான அதிநவீன கருவிகளை பிரதமர் மோடி இந்தியா சார்பில் வழங்கினார்.
பின்னர், தலைநகர் கம்பாலாவில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் மார்பளவு சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.