நாட்டை அவமானப்படுத்தும் ராகுல்- மத்திய அமைச்சர் சாடல்

'ராகுல் காந்தி தேசத்தை அவமதிக்கிறார்' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சுமத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கும் வங்கிகளில் இந்தியர்களின் பண வைப்பு உயர்ந்துள்ளதாக கூறி ராகுல் காந்தி, மோடி தலைமையிலான மத்திய அரசை விமர்சித்தார். இந்நிலையில், ராகுலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல்.

முன்னர் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்துள்ள பண அளவு, 2017 ஆம் ஆண்டு முந்தைய ஆண்டை விட 50 சதவிகிதம் உயர்ந்ததாகவும் அந்நாட்டில் இந்தியர்களால் மொத்தமாக 7,000 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராகுலின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் பியூஷ் கோயல், ‘ஒரு ஆதாரமற்ற அறிக்கையை ஆதாரமாக வைத்துக் கொண்டு ராகுல் காந்தி ஏன் தேசத்தை அவமானப்படுத்துகிறார் என்று சொல்ல வேண்டும். ஆதாரமற்றத் தரவுகளை வைத்துக் கொண்டு ராகுல் பேசுவது இது ஒன்றும் புதியது இல்லைதான். சமீபத்தில் நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போதும் அவர் அப்படித் தான் பேசினார்.

சுவிஸ் அரசு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கைபடி, 2017 ஆம் ஆண்டு இந்தியர்களால் அங்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தின் அளவு 2016 ஆம் ஆண்டை விட 34 சதவிகிதம் குறைந்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

More News >>