ஓபிஎஸ் மீது சொத்துக்குவிப்பு விசாரணைக்கு உத்தரவு- தமிழக அரசு
ஓபிஎஸ் மற்றும் குடும்பத்தினர் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தின் தற்போதைய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை திமுக-வின் சார்பில் எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கம் மூலம் தொடுத்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றெல்லாம் திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணையில் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விசாரணையில் தமிழக அரசின் பதிலை உயர் நீதிமன்றம் கோரியிருந்தது. இதையடுத்து தமிழக அரசு சார்பி, ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மீதான சொத்துக்குவிப்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.