மாற்றங்கள் இன்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை!
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை தொடர்ந்து மாற்றம் கண்டு வரும் நிலையில், இன்று அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
அதன்படி, இன்று காலை முதல் பெட்ரோல் விலை டெல்லியில் 76.23 ரூபாயும், 79.10 ரூபாயாக கொல்கத்தாவிலும், சென்னையில் 79.18 ரூபாயாகவும், மும்பையில் 83.68 ரூபாயாகவும் உள்ளது. டீசல் விலையைப் பொறுத்தவரை டெல்லியில் 67.79 ரூபாயாக உள்ளது.
கொல்கத்தாவில் 70.48 ரூபாயகவும், மும்பையில் 71.97 ரூபாயாகவும், சென்னையில் 71.59 ரூபாயாகவும் உள்ளது என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தகவல் கொடுத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையில், ஒவ்வொரு நாளும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன.
சர்வதேச அளவில் இருக்கும் கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்தும், ரூபாயின் மதிப்பைப் பொறுத்தும் இந்த விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.