கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்- ஸ்டாலின்
கருணாநிதி உடல்நிலை குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதலமைச்சரும் திமுக-வின் தலைவருமான மு.கருணாநிதி சில நாள்களுக்கு முன்னர் உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை குறித்த வதந்திகள் பரவத் தொடங்கின.
ஆனா, உடல்நிலை சிகிச்சை முடிந்து நலமுடன் கருணாநிதி வீடு திரும்பினார். இந்நிலையில் கலைஞருக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லை என வதந்திகள் பரவத் தொடங்கியது. ஆனால், அது முற்றிலும் வதந்தியே என ஸ்டாலின் மறுத்துள்ளார்.
மேலும், சிகிச்சை முடிந்த பின்னர் ஏற்படும் சிறு காய்ச்சால் தான் கலைஞருக்கு உள்ளது என்றும் கலைஞர் கருணாநிதியிந் உடல்நிலை குறித்து வரும் எந்த ஒரு வதந்தியையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் மற்றபடி தலைவர் நலமுடனே இருக்கிறார் என்றும் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.