6வது நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 6வது நாளாக லாரிகள் உரிமையாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் போராட்டத்தால் அத்தியாவசியப் பொருட்கள் தேக்கமடைந்துள்ளது.
சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறையில் மாற்றம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20ம் தேதி முதல் நாடு முழுவதும் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தம் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இன்றுடன் ஆறாவது நாளாக நாளாக தொடரும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தால் காய்கறி விலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
கோயம்பேடு சந்தையில் காய்கறியின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளது. சமையளுக்கு அன்றாட தேவைப்படும் தக்காளி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வால் பொது மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சுமார் 4 லட்சம் சரக்கு வாகங்கள் இயக்கப்படாததால் 7 லட்சம் ஓட்டுனர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும், வேலை நிறுத்தம் எதிரொலியாக நாள் ஒன்றுக்கு ரூ.250 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.