உகாண்டாவின் பொருளாதாரப் பிரச்னையை நாங்கள் சீர்படுத்துவோம்- மோடி

உகாண்டா சுற்றுப்பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி அந்நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு துணை புரிவதாக உறுதி அளித்தார்.

ஆப்ரிக்காவுக்கு 5 நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று உகாண்டாவுக்குச் சென்றார். முன்னர் அவர் ரவாண்டாவுக்குச் சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். உகாண்டாவை அடுத்து, தென்னாப்பிரிக்காவுக்குப் போக உள்ளார் மோடி.

உகாண்டா அதிபர் யோவேரி முஸ்வேனியை நேற்று சந்தித்த மோடி, இரு நாட்டு உறவு குறித்து கலந்துரையாடினார். இதையடுத்து இன்று பேசியுள்ள மோடி, ‘இந்தியாவுக்கும் உகாண்டாவுக்கும் இடையில் இருக்கும் வர்த்தக உறவு இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் லாபம் கொடுப்பதை உணரலாம். ஆனால், அதை முழுவதுமாக நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதைக் கண்டிப்பாக சரிசெய்ய வேண்டும். இந்தியாவுக்கு உகாண்டாவுக்கும் இடையில் இருக்கும் பொருளாதாரப் பற்றாக்குறையைப் போக்கிக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தற்போது இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் நல்ல சூழலை, வியாபாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆப்ரிக்க கண்டத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதில் உகாண்டா முன்னணியில் நிற்க முடியும்’ என்று பேசினார். 

More News >>