சக்கைப்போடு போடும் சீமராஜா படத்தின் சிங்கிள் டிராக்

சிவகார்த்திகேயன்-சமந்தா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் சீமராஜா படத்தின் சிங்கிள் டிராக் வெளியாக சக்கைப்போடு போட்டு வருகிறது.

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் சீமராஜா. சிவகார்த்திகேயனுக்கு முதல் முறையாக ஜோடி போட்டுள்ளார் சமந்தா. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் ஆகஸ்டு மாதம் 3ம் தேதி மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. மேலும், இந்த படம் வரும் செப்டம்பர் 13ம் தேதி வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீமராஜா படத்தின் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பாடல் சமூக வளைத்தளங்களில் வைரலாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

இதோ.. சீமராஜா படத்தின் சிங்கிள் டிராக்..

More News >>