லண்டன் மேடம் டூஸாட்ஸில் மெழுகு சிலை: குஷியில் தீபிகா படுகோன்
லண்டனில் உள்ள பிரபல மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகுச்சிலை அமைக்கப்பட உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். அடுத்தடுத்து பட ஹிட் கொடுத்து, அடுத்தடுத்து படம் நடித்து வருகிறார். இந்நிலையில், லண்டனில் உள்ள மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் தீபிகா படுகோனின் மெழுகு சிலை நிறுவப்பட உள்ளது.
இதுகுறித்து தீபிகா படுகோன் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து மகிழ்ச்சியடைந்துள்ளார். அருங்காட்சியகத்தை சேர்ந்த நிபுணர்கள் சிலை வடிப்பதற்காக, தீபிகா படுகோனை பல்வேறு கோணங்களில் அளவுகளும், புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
“நான் சிறுவயதில் தனது பெற்றோருடன் லண்டன் மேடம் டூஸாட்ஸ் அருங்காட்சியத்திற்கு சென்றபோது வரிசையில் நின்று காத்திருந்து சென்றேன். ஆனால், அதே அருங்காயட்சியகத்தில் எனக்கு சிலை நிருவப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார் தீபிகா நெகிழ்ச்சியுடன்.
லண்டனை தொடர்ந்து, டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்திலும் தீபிகாவின் மெழுகு சிலை நிருவப்படுவதாக கூறப்பட்டுள்ளது.