பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல்: இம்ரான்கான் கட்சி முன்னிலை

பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கானின் தெரிக்-இ-இன்சாப் என்ற கட்சி அதிக இடங்களில் வெற்றிப்பெற்று முன்னிலையில் உள்ளது.

இருப்பினும், அதிகாரிப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.பாகிஸ்தானில் நேற்று 270 தொகுதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 8 மணிக்கு விறுவிறுப்பாக தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. தேர்தல் முடிந்த அன்றே முடிவுகளை அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் கூறப்பட்டது. ஆனால், இதுவரையில், தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இருப்பினும், இம்ரான் கானின் தெஹ்ரீக்&இ&இன்சாப் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற்று முன்னிலையில் உள்ள்து. அடுத்ததாக, நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும், பெனாசிர் பூட்டோ மகன் பிலாவல் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியும் உள்ளன.குறிப்பாக, இம்ரான்கான் கட்சி 114 தொகுதிகளிலும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் 57 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் கட்சி 36 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. ஆனால், பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க 137 தொகுதிகளில் வெற்றிப்பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் முடிவுகள் தாமதம் ஏற்படுவதற்கு, வாக்கு எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகள் தான் காரணம் என்றும், அதனால் இந்த முடிவுகளை ஏற்கபோவதில்லை என்றும் நவாஸ் ஷெரிப் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News >>