போலீசாரால் தேடப்பட்டு வந்த கோவை மகளிர் விடுதி உரிமையாளர் சடலமாக மீட்பு
மாணவிகளை தவறான தொழிலுக்கு அழைத்த கோவை பீளமேடு மகளிர் விடுதி உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோவை பீளமேடு மகளிர் விடுதியில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில், அந்த விடுதியில் உள்ள இளம்பெண்கள், மாணவிகளை மகளிர் விடுதியின் உரிமையாளர் ஜெகநாதன் (48) மற்றும் வார்டன் புனிதா ஆகியோர் தவறான தொழிலுக்கு அழைத்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்ய முயன்றனர். ஆனால், இருவரும் தலைமறைவாகியது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த தனியார் மகளிர் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் நெல்லை ஆலங்குளம் அருகே உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஜெகனாதனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜெகனாதனின் உயிரிழப்பு கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.