பசி.. பட்டினியால் டெல்லியில் 3 சிறுமிகள் சாவு ? போலீஸ் விசாரணை

டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் பசி பட்டினியால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுனர் மனைவி மற்றும் 8 வயது, 5 வயது மற்றும் 2 வயதில் மூன்று பெண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வாழ்க்கையே ரிக்ஷாவை நம்பி தான் ஓடிக் கொண்டு இருந்துள்ளது.

இந்நிலையில், ஒரு நாள் ரிக்ஷா காணாமல் போய் உள்ளது. இதனால், ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட இந்த குடும்பம் கஷ்டப்பட்டு வந்துள்ளது. இதனால், தனது குழந்தைகள் மற்றும் மனைவியுடன் ரிக்ஷா ஓட்டுனர் தனது நண்பரின் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், மூன்று குழந்தைகளும் நேற்று திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமிகளை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். குழந்தைகள் இறப்பிற்கு அவர்கள் உணவு இல்லாததால் பட்டினியாக கிடந்து இறந்ததாக கூறப்பட்டது.

இருப்பினும், மருத்துவமனை அளித்த புகாரை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமிகள் தங்கி இருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு சில மருந்து பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சிறுமிகளின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே சிறுமிகளின் உயிரிழப்பிற்கான காரணம் குறித் தெரியவரும் என்றனர்.

More News >>