புத்தத் துறவிகளான தாய்லாந்து குகைச் சிறுவர்கள்!
தாய்லாந்து குகைக்குள் சிக்கித் தவித்து மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் தற்போது புத்தமத துறவறம் ஏற்றுள்ளனர்.
தாய்லாந்து சியாங்ராய் பகுதியில், தாம் லுவாங் குகை உள்ளது. இதனை 12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் லுவாங் குகையை பார்வையிடச் சென்றனர்.
அப்போது, இவர்கள் 13 பேரும் குகைக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து நடத்திய தேடுதல் பணியின்போது, 9 நாட்களுக்கு பிறகும் அவர்கள் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதன்பிறகு, தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டு குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரையும் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து தேற்றி அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தது.
இந்த மீட்புப் பணியின் போது மீட்புப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் பலியானார். இந்நிலையில் தங்களுக்காகக் கடினமான முடிவை எடுத்துக் காப்பாற்றிய வீரருக்கு நன்றி கலந்த அஞ்சலி தெரிவிக்கும் வகையிலும் இந்த மீட்புப் பணியில் உதவிய அத்தனை பேருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலும் 12 மாணவர்களில் 11 பேர் துறவறம் ஏற்றுள்ளனர்.
மீதமுள்ள ஒரு மாணவ புத்த மதத்தைச் சாரதவன் என்பதால் அவன் இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை. இந்த 11 மாணவர்களும் தற்காலிக துறவறமே மேற்கொண்டுள்ளனர்.