சென்னை - தூத்துக்குடி இடையே விமான சேவை தொடக்கம்
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது.
சென்னை - தூத்துக்குடி இடையே நேரடியாக செல்லும் விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது. இதனால், தினமும் 3 முறை இண்டிகோ நிறுவனம் சென்னை - தூத்துக்குடி இடையே விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து காலை 5.50 மணிக்கு புறப்படும் விமானம், தூத்துக்குடிக்கு 7.30 மணிக்கு சென்றடையும். இதேபோல், காலை 10.25 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 12.05 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். தொடர்ந்து, பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 4.20 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும்.
இதேபோல், தூத்துக்குடியில் இருந்து முதல் முறையாக காலை 7.55 மணக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு விமானம் சென்னை வந்து சேரும். தொடர்ந்து, 12.35 மணிக்கு புறப்படும் விமானம் மதியம் 2.15 மணிக்கு சென்னை வந்து சேரும். இதேபோல், மாலை 4.40 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.15 மணிக்கு சென்னை வந்து சேரும்.