பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
தமிழ் திரைப்பட பிரபல இயக்குனர் மணிரத்னம் உடல் நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பகல் நிலவு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். இதன்பிறகு, இதயகோவில், மௌனராகம், நாயகன், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, ராவணன், ஓகே கண்மணி உள்ளிட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் மணிரத்னம். இவர் கடைசியாக இயக்கி வெளிவந்த படம் கார்த்தி நடித்த காற்று வெளியிடை.
இதைதொடர்ந்து, தற்போது செக்க சிவந்த வானம் படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இந்த படத்தில், அரவிந்த்சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா உள்ளிட்ட பரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிரத்னத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் தீயாக பரவியதை அடுத்து, திரையுலகினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
ஆனால், மணிரத்னம் வழக்கமான பரிசோதனைக்காக தான் வந்தார் எனவும் பரிசோதனை முடிந்து வீடு திரும்பிவிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.