போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த முடிவு
கோரிக்கைகளை நிறைவேற்றாத காரணத்தால் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஊதிய உயர்வு, நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தமிழகமே ஸ்தம்பித்தது.
இதையடுத்து, தொ.மு.ச., சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், நிர்வாக இயக்னர்களுக்கு போக்குவரத்து சங்கம் சார்பில் ஸடிரைக் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை பல்லவன் இல்லம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும். அங்கு, வேலை நிறுத்தம் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.