கருணாநிதியை சந்திக்க கோபாலபுரத்திற்கு சென்றார் கமல்ஹாசன்
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க கோபாலபுரத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு வந்தார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதால் கருணாநிதிக்கு திடீர் காய்ச்சல் வந்துள்ளது. இதனால், அவர் நலிவுற்று இருக்கிறார் என்று காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து, நேற்று இரவு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் கோபாலபுரத்திற்கு விரைந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தனர்.
இவர்களை தொடர்ந்து, திருமாவளவன், ஜி.கே.வாசன், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் ஆகியோரும் கோபாலபுரள் வந்து நலம் விசாரித்தனர்.
இவர்கள் வந்த சில நிமிடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கோபாலபுரத்திற்கு விரைந்து கருணாநிதி குறித்து நலம் விசாரித்தார்.
கருணாநிதியை சந்தித்து நலம் விசாரிக்க, அடுத்தடுத்து தமிழக கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் வருகை தந்ததால், தகவல் அறிந்து திமுக தொண்டர்கள் கோபாலபுரம் வீடு முன்பு குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.