முதலமைச்சராக நினைத்து ஜோக்கரான தினகரன் - திவாகரன் விமர்சனம்

முதலமைச்சராக நினைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் ஜோக்கராகிவிட்டதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் விமர்சித்துள்ளார்.

சென்னை வந்த அண்ணா திராவிட கழகத்தின் பொது செயலாளர் திவாகரன், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று ஸ்டாலினை சந்தித்து, கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

முன்னதாக சென்னை விமானநிலையத்தில் பேசிய திவாகரன், “இன்னும் சில நாட்களில் அமெரிக்காவில் டிரம்ப்பை எதிர்த்து கூட தினகரன் போட்டியிடுவார். முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற மிதப்பில் மிதந்து, டிடிவி தினகரன் ஒரு ஜோக்கராக மாறியிருக்கின்றார்”

“நாங்கள் அனைத்து கட்சியுடன் இணைப்பாக தான் இருக்கின்றோம் அதிகப்படியான திராவிட கட்சியில் மிக இணைப்பாக இருக்கின்றோம்” என்றார்.

“அரசியல் சண்டை போடுவதற்கான களமில்லை. தமிழ்நாட்டில் முக்கியமாக நாகரிக அரசியல் தேவை. அரசியல் நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின்” என திவாகரன் கூறினார்.

“தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கருணாநிதி இல்லத்திற்கு சென்று சந்தித்து விட்டு வந்திருக்கின்றார். இதுபோன்ற நாகரீகம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

“மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் தமிழக துணை முதல்வர் டெல்லியில் அவமானப்படுத்தி இருக்கக்கூடாது. எதற்கு எடுத்தாலும் பதவி விலக வேண்டும் என்று கூறுவது சாத்தியமாகாது” என்றும் திவாகரன் கூறினார்.

More News >>