மூன்றாவதாக சாதி மதம்.. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2

மிகுந்த எதிர்பார்ப்புடன் கமல் நடித்த விஸ்வரூபம் 2 ஆம் பாகம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஏற்கனவே நானாகிய நதிமூலமே, ஞாபகம் வருகிறதா பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன்ஸ் கருதி மேலும் ஒரு பாடல் இன்று வெளியிடப்பட்டது. "சாதி மதம்" என்ற ஒரு சிங்கிள் ட்ராக் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஜிப்ரான் இசையில் ஆண்ட்ரியா மற்றும் சத்ய பிரகாஷ் இணைந்து பாடியுள்ளனர். பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளார்.

ஆஸ்கார் ரவிச்சந்திரனுடன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள விஸ்வரூபம் 2ம் பாகத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது. ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர்கபூர் படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>