காவேரி மருத்துவமனையில் கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. மேலும், மருத்துவமனையில் இருந்து முதல் சிகிச்சை அறிக்கை இன்னும் ஒரு மணி நேரத்தில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திமுக தொண்டர்கள் சென்னையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

சென்னைக்கு வந்துள்ள தொண்டர்கள் கருணாநிதி வீடு அமைந்துள்ள கோபாலபுரம் பகுதியிலும், காவேரி மருத்துவமனை அமைந்துள்ள ஆழ்வார்பேட்டை பகுதியிலும் குவிந்துள்ளனர்.

More News >>