இத்தாலியில் 140 கிலோ எடை கொண்ட உலகின் பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக்

ரோம்: கிறிஸ்துமஸ் நெருங்கி உள்ள நிலையில், இத்தாலியில் உலகின் மிகப்பெரிய பன்டோன் கேக் தயாரிக்கப்பட்டுள்ளது, இது, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் என்றாலே கேக் தான். குறிப்பாத இத்தாலியில் உள்ள கிறிஸ்துவ மக்கள், பன்டோன் கேக் இல்லாமல் கொண்டாட மாட்டார்கள். பழங்கள், உலர்ந்த திராட்சை மற்றும் இனிப்பு கலந்து தயாரிக்கப்படும் இந்த கேக் கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் என்றே கூறலாம்.

கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக இத்தாலியின் மிலன் நகரில் உள்ள பேக்கரி ஒன்றில் பிரமாண்ட கேக் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் எடை 140 கிலோவும், 2 மீட்டர் உயரமும் கொண்டது. இதனை 1200 துண்டுகளாக வெட்டலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த பிரமாண்ட கேக்கை தயாரித்த நபர், அதனை அலங்காரம் செய்து, கடையில் பார்வைக்காக வைத்திருக்கிறார். உலகின் மிகப்பெரிய கேக் என்ற பெருமையை பெற்றுள்ள பன்டோன் கேக்கை செய்வதற்கு 36 மணி நேரம் செலவாகியிருக்கிறது.

இத்தாலியின் பாரம்பரிய உணவான இந்த பன்டோன் கேக் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் என கேக் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

More News >>