உத்தரப்பிரதேசத்தில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 30 பேர் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தொடரந்து பெய்து வரும் கனமழையால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 30 பேர் பலியாகி உள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று கன மழை கொட்டியது. மழையுடன் சேர்ந்து இடி, மின்னலும் இருந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மழை வெள்ளத்தால் சூழ்ந்தது.

இதில், வீடுகள் இடிந்தும், இடி, மின்னல் தாக்கியும் ஆக்ராவில் 5 பேரும், மெயின்புரியில் 4 பேரும், முசாபர் நகர், கஸ்கஞ்ச் பகுதிகளில் 3 பேரும், மீரட், பெரெய்லியில் 2 பேரும், கான்பூர், மதுரா, காசியாபாத், ரே பரேலி உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் என மொத்தம் 30 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இன்னும் சில நாட்கள் கன்மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும், மீட்பு பணிகளை அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் துரிதப்படுத்தி உள்ளார். மேலும், மீட்கப்பட்டவர்களை முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு அத்தியாவசிய வசதிகளை செய்யவும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

More News >>